இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எப்போதும் களத்தில் பிஸியாக இருப்பார்கள். ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் இடையில் ஓய்வு எடுப்பதற்கே நேரம் இல்லாமல் இருந்த நிலையில், கரோனா வைரசால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் ஓய்வெடுத்து வருகிறார்கள்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் துணி துவைப்பது, கழிவறை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை ஷிகர் தவான் செய்துள்ளார். அருகில் அவரது மனைவி பிசியாக அலைபேசியில் பேசியும், மேக் அப் போடுவதுபோலவும் இருக்கிறார்.