உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் மட்டும் இதுவரை 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், மக்களிடையே விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ட்வீட் செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ”வரும் முன் காப்போம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாம் அனைவரும் சுகாதாரத்துடன் இருந்து இந்த வைரஸை எதிர்த்து போராடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.