கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒட்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் ரசிகர்களுடன் உரையாடலும், நேர்காணலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகின் சிறந்த யார்க்கர் பவுலர் மலிங்கா தான்: பும்ரா! - முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா
உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் இலங்கை அணியின் மலிங்கா தான் என இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.
இன்று ஐசிசி தளத்தில் பேசிய பும்ரா, ''உலகின் தலைசிறந்த யார்க்கர் பந்துவீச்சாளர் இலங்கை அணியின் மலிங்கா தான். அவரிடமிருந்து தான் யார்க்கர் பந்து எப்படி வீச வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் பல காலமாக யார்க்கர் என்னும் ஆயுதத்தை சிறப்பாக பயன்படுத்தியவர்.
கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின் என்ன மாதிரியான விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்த்துள்ளேன். பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்தக் கூடாது என்றால் பந்துவீச்சாளர்களுக்கு கடினம் தான். ஏனென்றால் மைதானங்கள் சிறிதாகிவிட்டன. ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கான வழிகள் இல்லை. இப்போது உமிழ்நீரும் பயன்படுத்தக் கூடாது என்றால், அதற்கான மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும்'' என்றார்.