தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அணிக்கு ரீ எண்ட்ரீ கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்கள்! - India Tests

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்களான பிரைன் லாரா, ராம்நரேஷ் சர்வான் ஆகியோர் புதிய பொறுப்புகளோடு அணிக்கு ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

brain lara

By

Published : Aug 17, 2019, 8:45 PM IST

இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த டி20, ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

ஒருநாள், மற்றும் டி20 தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர்களான பிரைன் லாரா, ராம்நரேஷ் சர்வான் ஆகியோர் அணி வீரர்களுக்கு ஆலோசகர்களாக செயல்படுவார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரு ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் அணியோடு இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details