ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடிவரும் ரிஷப் பந்த், முன்னாள் கேப்டன் தோனியின் இடத்திற்குச் சரியான தேர்வு எனக் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் விளையாட்டுத் தொலைக்காட்சிக்கு லாரா அளித்த பேட்டியில், "ஒரு வருடத்திற்கு முன்பு ரிஷப் பந்த், தோனியின் மாற்று வீரர் என்று கூறியபோது அதனை நான் மறுத்தேன். ஆனால் தற்போது தோனியின் மாற்று வீரராக ரிஷப் பந்தைதான் முதலில் பரிந்துரைப்பேன்.
காரணம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிவரும் பந்த், இந்தச் சீசனில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிவருகிறார். சமீப காலமாக அவரது ஆட்டத்தில் பொறுப்புடமை அதிகரித்துள்ளது.