இந்நிலையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் கடந்த டிச.6ஆம் தேதி தொடங்கி டிச.8 ஆம் தேதி முடிவடைந்த இப்போட்டி டிராவில் நிறைவடைந்தது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஏ அணியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய புக்கோவ்ஸ்கி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சரில் காயமடைந்தார். இதையடுத்து அணியின் மருத்துவர் களத்திற்கு வந்து அவரை பரிசோதித்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக புக்கோவ்ஸ்கி ஆட்டத்திலிருந்து பாதியிலேயே விலகினார்.
அதன்பின் புக்கோவ்ஸ்கிக்கு எட்டு கட்டங்களாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு ஒன்பதாம் கட்டமாக மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பேசிய ஆஸி., அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், “புக்கோவ்ஸ்கி மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுள்ளது.