தமிழ்நாடு

tamil nadu

’தோனியைப் போன்று பாண்டியா ஆட்டத்தை பினீஷ் செய்துவிட்டார்' - ஜஸ்டின் லங்கர்!

By

Published : Dec 6, 2020, 10:18 PM IST

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போட்டியை ஃபினீஷ் செய்தது முன்னாள் கேப்டன் மகேந்திரா சிங் தோனியை கண்முன் நிறுத்தியது என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.

Langer likens Pandya to MS Dhoni in finishing games
Langer likens Pandya to MS Dhoni in finishing games

சிட்னியில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவின் சாம்ஸ் வீசிய மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் ஹர்த்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து ஆஸி., பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் கூறுகையில், “இது ஒரு நம்பமுடியாத போட்டியாக அமைந்தது.

ஏனெனில் பாண்டியா எவ்வளவு ஆபத்தானவர் என்பதை எங்களுக்குப் புரிய வைத்துள்ளார். மேலும் அவர் இன்று ஆட்டத்தை ஃபினீஷ் செய்த விதம் கடந்த காலத்தில் தோனி ஆட்டத்தை ஃபினீஷ் செய்வது போன்று கண்முன் நிறுத்தியது.

ஹர்திக் பாண்டியா மற்றும் மகேந்திர சிங் தோனி

ஹர்த்திக் பாண்டியா இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிலும் இன்றைய ஆட்டம் சிறப்புமிக்கது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். மேலும் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அற்புதமான பீல்டிங்கை வெளிப்படுத்தினர்.

ஆனாலும் ஆட்டம் எங்கள் கையை விட்டு சென்றது. அனுபவமிக்க வீரர்களைக் கொண்டு இந்திய அணி இன்று எங்களை வீழ்த்தியது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘பயிற்சிபெற தடைவிதித்திருப்பது எங்கள் வீரர்களை பாதித்துள்ளது’ - மிஸ்பா உல் ஹக்

ABOUT THE AUTHOR

...view details