டிஎன்பிஎல் டி20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்களான கேப்டன் அபிநவ் முகுந்த் 5 ரன்களிலும், ஷாருக் கான் 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய அந்தோணி தாஸ் 13 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அதன்பின் களமிறங்கிய அகில் ஸ்ரீநாத் நிலைத்து ஆடி 22 பந்துகளில் 36 ரன்களை அடித்தார்.