ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது, பகலிரவு போட்டியாக பெர்த்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மர்னுஸ் லபுசாக்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடி வந்த அவர் அரைசதமடித்து அசத்தினார். பின் அரைசதத்தை நெருங்கியகொண்டிருந்த வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்மித்தும் 43 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.