நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 2020-21 ஆம் சீசனுக்கான 20 வீரர்கள் இடம்பிடித்த வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான காலின் முன்ரோ, ஜீட் ராவல், டாட் அஸ்டில் ஆகியோரின் ஒப்பந்தங்கள் நீக்கப்பட்டு, டெவன் கான்வே, கெய்ல் ஜமிஸன், அஜாஸ் பட்டேல் ஆகியோர் முதன் முறையாக ஒப்பந்தந்ததில் இணைந்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு இப்பட்டியலில் இடம் பெறாமல் இருந்த ஜிம்மி நீசம், வில் யங், டாம் பிளண்டல் ஆகியோருக்கும் மீண்டும் இடம்கிடைத்துள்ளது. இவர்களின் இந்த ஒப்பந்த பட்டியலானது இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செயல்முறை படுத்தப்படும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தேர்வுகுழு மேலாளர் கவின் லார்சன் கூறுகையில், 'தற்போது வருடாந்திர பட்டியலிலில் இணைந்துள்ள ஜமிஸன், அஜாஸ், கான்வே ஆகியோர் கடந்த 12 மாதங்களாக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக கான்வே முன்று வடிவிலான போட்டிகளிலும் தனது சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருவதன் மூலம் கூடிய விரைவில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை மேம்படுத்துவார்' என்று தெரிவித்துள்ளார்.