கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தான் விளையாடியதில் கங்குலி, தோனியை விட அனில் கும்ப்ளேதான் மிகச்சிறந்த இந்திய கேப்டன் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கம்பீர் கூறுகையில், மகேந்திர சிங் தோனி சாதனைகளின் அடிப்படையில் சிறந்த கேப்டனாக இருக்கிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் விளையாடிய அணியின் சிறந்த கேப்டன் அனில் கும்ப்ளே தான்.
அனில் கும்ப்ளேவுடன் கவுதம் கம்பீர் மேலும் அவர் இந்திய அணியை நீண்ட காலம் வழிநடத்த வேண்டுமென்ற எண்ணமும் என்னுள் இருந்தது. நான் அவருக்கு கீழ் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ளேன். அவர் நீண்ட காலம் இந்தியாவிற்கு கேப்டனாக செயல்பட்டிருந்தால் பல்வேறு சதனைகளின் பட்டியலில் அவருடைய பெயர் தான் முதலிடத்தில் இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மது போதையில் விபத்து: கிரிக்கெட் வீரர் கைது!