தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரதமரை கேப்டனாக நியமித்து ரமீஸ் ராஜா உருவாக்கிய இந்தியா - பாகிஸ்தான் அணி! - இம்ரான் கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய ஒருநாள் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நியமித்துள்ளார்.

Kumble only Indian bowler in Ramiz Raja's Ind-Pak XI, Imran to lead
Kumble only Indian bowler in Ramiz Raja's Ind-Pak XI, Imran to lead

By

Published : May 16, 2020, 9:16 PM IST

Updated : May 16, 2020, 9:58 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாக வலம் வந்தவர் ரமீஸ் ராஜா. இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, இந்தியா - பாகிஸ்தான் வீரர்களைக் கொண்டு தனது ஒரு நாள் அணியை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் அணிகளைச் சேர்ந்த வீரர்களை வைத்து ஒருநாள் அணியை உருவாக்க முயற்சி செய்தேன். ஆனால் அது மிகவும் கடினமானதாக இருந்தது. அதனால் எனது மகனிடம் இதுபற்றி வினவிய போது, அவன் என்னிடம் இந்தியாவில் பேட்ஸ்மேன்கள் அதிகம், பாகிஸ்தானில் பந்துவீச்சாளர்கள் அதிகம். அதனால் இந்தியாவிலிருந்து பேட்ஸ் மேன்களையும், பாகிஸ்தானிலிருந்து பந்துவீச்சாளர்களையும் தேர்ந்தெடுக்கும் படி அறிவுரை வழங்கினார்.

அதன்படி நான் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களான சச்சின், சேவாக், விராட், கவாஸ்கர், தோனி உள்ளிட்டவர்களைத் தேர்வு செய்தேன். மேலும் அந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பிரதமரும், பாகிஸ்தானுக்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானை நியமித்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் - சச்சின் டெண்டுல்கர்

ரமீஸ் ராஜா உருவாக்கிய இந்தியா - பாகிஸ்தான் இணைந்த ஒருநாள் அணி:வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி, இம்ரான் கான்(கேப்டன்), வாசிம் அக்ரம், வக்கர் யூனிஸ், அனில் கும்ளே, முஷ்டாக்.

இதையும் படிங்க:ஒருங்கிணைந்த மும்பை & சென்னை அணியின் கேப்டனாக ஜாம்பவானை நியமித்த ரோஹித், ரெய்னா!

Last Updated : May 16, 2020, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details