தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக் கோப்பை மேட்ச் ஃபிக்சிங்: விசாரணையில் சங்கக்காரா!

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காராவிடம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

kumar-sangakkara-grilled-for-nearly-10-hours-in-wc-fixing-probe
kumar-sangakkara-grilled-for-nearly-10-hours-in-wc-fixing-probe

By

Published : Jul 3, 2020, 3:51 PM IST

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், மேட்ச் ஃபிக்சிங் நடைபெற்றதாக, இலங்கை விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்தா எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இலங்கை அணியின் அப்போதிருந்த கேப்டன் குமார் சங்கக்காராவிடம் இலங்கை விளையாட்டு அமைச்சகத்தின் சிறப்பு ஊழல் தடுப்பு பிரிவினரால் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வெளியான தகவலில், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார் சங்கக்காரா, விளையாட்டு அமைச்சகத்தின் சிறப்பு காவல் துறையினரால் கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை நடத்தி அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வரியத்தின் முன்னாள் தேர்வு குழு தலைவர் அரவிந்த டி சில்வா, தொடக்க வீரர் உப்புல் தரங்கா ஆகியோரையும் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details