மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், ராஜஸ்தான் அணியும் முன்னாள் வீரரும் தற்போதைய விளம்பரத் தூதருமான ஷேன் வார்னே கிரிக்கெட் தொடர்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகளை வெளியீட்டு வருகிறார்.
அதில், தற்போதைய கேப்டன் விராட் கோலியுடன் முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருவதால், இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
அதற்கு தற்போது பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே, சச்சின், கோலி இருவருக்கும் நான் பந்துவீச விரும்ப மாட்டேன். 90-களுக்கு பின் சச்சின் மிகவும் அபாயகரமான வீரர். விராட் கோலி தற்போதே பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கியுள்ளார். இருவரையும் என்னால் ஒரே நிலையில் வைத்து பார்க்க முடியாது. இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஆனால் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், வெஸ்ட் இண்டீஸின் விவியன் ரிச்சர்ட்ஸும், விராட் கோலியும் சிறந்த வீரர்கள். தற்போது விராட் கோலி கிரிக்கெட் ஆடிவரும் நிலையில், அவரைப் மதிப்பிடுவது சர்யாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், டர்னர்,ஸ்மித்,சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார்கள் என வார்னே கூறியுள்ளார்.