நெருக்கடிக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அதிரடி பேட்டிங் வரிசை, பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் என இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையில் களமிறங்கு பெங்களூரு அணி, இதுவரை நடைபெற்ற 12 ஐபிஎல் சீசன்களில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை சென்றும், ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்றவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், அல்பீ மோர்கல், யுவராஜ் சிங், கே.எல். ராகுல், மோயீன் அலி, டேல் ஸ்டெயின் என பல நட்சத்திர வீரர்களைக் கொண்டு களமிறங்கினாலும், பெங்களூரு அணிக்கு அதில் எதுவுமே பலனளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களின் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் கடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது ஆரோன் ஃபிஞ்ச், கிறிஸ் மோரிஸ், ஆடம் ஸாம்பா என அதிரடி வீரர்களை ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது. அதேபோல், ஏபிடி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், யுஸ்வேந்திர சஹால், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அணியில் தக்கவைத்துக் கொண்டது.
அதிரடியான பேட்டிங் ஆர்டரையும், சாதுரியமான பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ள பெங்களூரு அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டி வருகிறது. கிரிக்கெட்டின் அரசன் கோலியின் வியூகம் இந்த சீசனில் எடுபடுமா? என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏ சாலா கப் நம்தே...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: