தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டிடிசிஏவின் பயிற்சியாளராக ராஜ்குமார் சர்மா நியமனம்! - டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கம்

டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிடிசிஏ) 2020-21 சீசனுக்கான சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக ராஜ்குமார் சர்மாவையும், துணை பயிற்சியாளராக குர்ஷரன் சிங்கையும் தேர்வு செய்துள்ளது.

Kohli's childhood coach Rajkumar Sharma appointed Delhi chief coach
Kohli's childhood coach Rajkumar Sharma appointed Delhi chief coach

By

Published : Dec 20, 2020, 7:05 PM IST

இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலமும் தங்களது உத்தேச அணிகளை அறிவித்து வருகின்றன.

டிடிசிஏ பயிற்சியாளர்

2020-21 சீசனுக்கான டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கம் தனது அணி பயிற்சியாளர், மருத்துவர், உடற்பயிற்சி பயிற்சியாளர் ஆகியோரை நியமித்துள்ளது.

அதன்படி, சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ரஞ்சி தொடர் வீரரும், விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளருமான ராஜ்குமார் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் துணை பயிற்சியாளராக குர்ஷரன் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உடற்பயிற்சி பயிற்சியாளராக உமேஷ் சக்ராவும், அணியின் மருத்துவராக கஜேந்திர குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:IND vs AUS: டெஸ்ட் தொடரிலிருந்து புக்கோவ்ஸ்கி விலகல்!

ABOUT THE AUTHOR

...view details