தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலியின் விடுப்பு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்- இயன் சாப்பல்

ஆஸ்திரேலிய அணிகெதிரான டெஸ்ட் தொடரின் போது, கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகியுள்ளது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தெர்வித்துள்ளார்.

Kohli's absence will create big hole in Indian batting order, says Chappell
Kohli's absence will create big hole in Indian batting order, says Chappell

By

Published : Nov 22, 2020, 4:41 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக தனது குழந்தை பிறப்புகாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியோடு விடுப்பு எடுத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார். இதனால் அவருக்கு பதிலாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் யார் அணியில் இடம்பெறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அஸி., அணியின் முன்னாள் கேடன் இயன் சாப்பல், “இந்திய அணியின் விராட் கோலியின் விடுப்பு, அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இருப்பினும் இதனை சரிசெய்ய இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு விராட் கோலியின் இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவிதுள்ளார்.

இதையும் படிங்க:ஈஸ்ட் பெங்கால் அணியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும்: ராய் கிருஷ்ணா

ABOUT THE AUTHOR

...view details