தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2019, 3:33 PM IST

ETV Bharat / sports

கோலிக்கு பீட்டாவின் மூலம் மேலும் ஒரு மகுடம்!

இந்தியாவில் விலங்குகள் பாதுகாப்பு மையமாகச் செயல்பட்டு வரும் பீட்டா இந்தியா, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதராகத் தேர்வு செய்துள்ளது.

virat kholi awarded peta

மனிதர்களைப் போலவே விலங்குகளும் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டது பீட்டா அமைப்பு. இந்த அமைப்பில் இந்தியாவில் பல்வேறு பிரபலங்களும் தங்களை இணைத்துள்ளனர்.

அந்த வகையில் இந்த அமைப்பின் உறுப்பினராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னை இணைத்துள்ளார். மேலும் அவர் விலங்குகள் துன்புறுத்தப் படுவதைத் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதன் காரணமாக பீட்டா இந்தியா அமைப்பு விராட் கோலிக்கு 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கவுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், ’விராட் கோலி தன்னால் முடிந்த அளவுக்கான உதவிகளை எங்கள் அமைப்பிற்குச் செய்து வருகிறார். அதனால் இந்த ஆண்டின் சிறந்த மனிதருக்கான விருதை அவருக்கு நாங்கள் வழங்கவுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளது.

விராட் கோலிக்கு வழங்கப்படவுள்ள விருது

மேலும் இதற்கு முன் இந்த விருதினை, சஷி தரூர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பனிகர் ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர்கள் அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், சோனம் கபூர், கபில் சர்மா, ஹேமா மாலினி, ஆர். மாதவன், மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீரர் மில்கா சிங் #HBDTHEFLYINGSIKH!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details