கோவிட்-19 பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவிற்கு பல தரப்பினரிடமிருந்து ஆதரவு பெருகியதோடு, அதனைப் பல்வேறு பிரபலங்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்தவரிசையில் கரோனா வைரஸ் தாக்குதலின் ஆரம்பத்திலிருந்தே சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவரும் பொதுமக்களிடமும், தனிமைப்படுத்துதலைக் குறித்து வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலிக்கு சிகை திருத்துவது போன்ற காணொலியை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில், ”விராட் கோலி, நீங்கள் தனிமைப்படுத்தப்படும்போதுதான் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதிக்கிறீர்கள். என் மனைவி சமையலறை கத்திரிக்கோலால் என்னுடை முடியை திருத்துகிறார். என்னவொரு அழகான ஹேர் கட்” என்று கூறுகிறார்.
அனுஷ்கா சர்மாவின் ட்விட்டர் காணொலி தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியிலும், விராட் கோலி ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:காலையில் டிரெட்மில், மாலையில் குழந்தைகளுடன் விளையாட்டு - தமிம் இக்பால்