சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 17 புள்ளிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்யசன், இந்தியாவின் புஜாரா, ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசக்னே ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.
இவர்கள் தவிர்த்து கராச்சியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தில் இருக்கிறார். இதனால் ஆறாவது இடத்திலிருந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே, ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ரஹானேவுக்கு அடுத்தடுத்த இடங்களில் வார்னர் (ஆஸி.), ஜோ ரூட் (இங்கி.), ராஸ் டெய்லர் (நியூசி.) ஆகியோர் உள்ளனர்.