தலைசிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக். இவர் 2016 முதல் 2019 உலகக்கோப்பை வரை இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சு ஆலோசகராக விளங்கினார்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திய யுத்தியை குறித்து பேசிய அவர், "கோலியின் விக்கெட்டை ஒட்டுமொத்த இந்திய அணியின் விக்கெட் ஆகத்தான் பார்க்க வேண்டுமென அடில் ரஷித், மொயின் அலி ஆகியோரிடம் கூறுவேன்.
ஏனெனில் கோலி ஒரே வீரர் அணியில் உள்ள 11 வீரருக்கு சமம். அவரைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்துவீசும் போது நீங்கள் உங்களது திட்டத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.