தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆர்சிபி அணியினருடன் ஜாலியா இருக்கும் கோலி வைரல் வீடியோ! - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் தனது அணி வீரர்களுடன் உற்சாகமாக பொழுதைக் கழித்து வரும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ கேம் ஆடும் கோலி

By

Published : Mar 21, 2019, 6:58 PM IST

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்நிலையில் கோலியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோன்றும் விராட் கோலி, விர்ச்சுவல் ரியாலிட்டி கிரிக்கெட் வீடியோ கேமை ஆடுகிறார்.

அப்போது அவருக்கு போடப்பட்ட பந்தை லெக் சைடில் அடிக்க கோலி முற்படுகிறார். ஆனால், அந்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு எதிர்திசையில் செல்கிறது. பின், பந்து எங்கே என கோலி ஆச்சரியத்துடன் கேட்கிறார். அப்போது அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் கோலியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மா, தனது கணவரின் கேள்வியை பார்த்து வியப்படைகிறார்.

இந்த வீடியோவில் ஆர்சிபி அணியின் பார்த்திவ் பட்டேல், உமேஸ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இதேபோன்று விராட் கோலி, தனது ஆர்சிபி அணி வீரர்களுடன் இன்று காலை சென்னை கிளம்பியபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

வீடியோ கேம் ஆடும் கோலி

பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பை வென்றதில்லை. பல சாதனைகளை படைத்துள்ள கோலி இம்முறையாவது பெங்களூரின் ஐபிஎல் கனவை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்தே பார்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details