தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலி, பும்ரா இந்த சகாப்தத்தில் சிறந்தவர்கள் - பிரையன் லாரா - ஜஸ்பிரித் பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவின் இந்த சகாப்தத்தின் ஐந்து சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் பும்ரா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர்.

Kohli, Bumrah among Lara's best of this era
Kohli, Bumrah among Lara's best of this era

By

Published : Dec 5, 2020, 7:46 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமானவர் பிரைன் லாரா. இவர் தனது சமூக வலைதளத்தில் இந்த சகாப்தத்திற்கான ஐந்து பேஸ்ட்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

லாராவின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட், தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லாராவின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஆர்ச்சர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் லாரா தனது காலத்தில் தன்னுடன் விளையாடிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், காலிஸ், சங்ககாரா ஆகியோரும், பந்துவீச்சாளர்களில் வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, வக்கார் யூனூஸ், முத்தையா முரளிதரன், கிளென் மெக்ராத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:AUS vs IND: தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்குமா இந்தியா?

ABOUT THE AUTHOR

...view details