ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் பதிவுகள் கொண்ட பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் அதிக ரசிகர்களை ஈர்க்கப்பட்ட பட்டியலை ட்விட்டர் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் ஆண்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தையும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் மகளிர் பிரிவில் பேட்மிண்டன் உலகச்சாம்பியன் பி.வி. சிந்து முதலிடத்தையும் இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ் இரண்டாமிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.