இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர்.
இப்பட்டியலில், மூன்றாம் இடத்திலிருந்த கே.எல். ராகுல் இங்கிலாந்து அணியுடான டி20 தொடரில் சொதப்பியதால் ஒரு இடம் பின்தங்கி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் அடுத்தடுத்து அரைசதங்களை கடந்த இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி மீண்டும் ஐந்தாம் இடத்திற்குள் நுழைந்தார்.
மேலும், டி20 பந்துவீச்சாளர் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்திலும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் அதே அணியை சேர்ந்த முகமது நபி முதலிடத்தையும் தக்கவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:‘இந்த மைதானத்தில் எந்த இலக்கும் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும்' - மோர்கன்