உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தன்னலமின்றி செயல்பட்டுவருகின்றனர்.
இவர்களைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல். ராகுல் இவர்களது அயராத சேவைகளைப் பாராட்டும்விதமாக பெங்களூருவில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு பூமா ஷூக்களை வழங்கினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தங்களது உயிரைப் பணயம்வைத்து நாட்டை கவனித்துக்கொள்ளும் மருத்துவ, சுகாதார ஊழியர்களுக்கு நன்றி. உங்களது சேவைகளுக்கு நன்றி செலுத்தும்விதமாக என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை கரோனாவால் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 773 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,970 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஃபோர்ப்ஸில் இடம்பிடித்த சோலோ கிரிக்கெட்டர் விராட் கோலி!