இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருவபர் கே.எல்.ராகுல். இவர் சமீபத்தில் தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இந்திய அணியின் ரெய்னா, அஸ்வின், சஹால், மயங்க் அகர்வால், சகா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து கே.எல். ராகுல் கூறுகையில், ”இது எனது வாழ்வில் மிகவும் சிறப்பான தினம். அதனால் நானும், எனது கல்லியும் இணைந்து இந்நாளை இன்னும் சிறப்பாக மாற்ற நினைத்தோம். அதனால் நான் எனது கிரிக்கெட் உபகரணங்கள் (மட்டைகள், கால் தடுப்புகள் (Pads), கிளவுஸ், ஹெல்மட், ஜெர்சிகள்), 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது பயன்படுத்திய பேட் உள்ளிட்டவைகளை ஏலத்தில் விற்க நன்கொடையாக அளித்துள்ளேன்.