ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக வலம் வருபவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த ஸ்மித், தன்னை மிகவும் கவர்ந்த இந்திய வீரராக கே எல் ராகுலையும் தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்மித், "கே.எல்.ராகுல் மிகச்சிறந்த வீரர். தன்னை கவர்ந்த இந்திய வீரரும் அவர்தான். அதேசமயம் இந்தியாவின் மிகச்சிறந்த ஃபீல்டராக நான் ஜடேஜாவை பரிந்துரைப்பேன். ஏனெனில் அவரது திறன் மற்ற வீரர்களை காட்டிலும் மேலானது.