டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்பின் கொல்கத்தா அணியின் மோர்கன் பேசுகையில், ''நான் தாமதமாக களமிறங்கியதாக நினைக்கவில்லை. ஏனென்றால் கொல்கத்தா அணியின் பேட்டிங் ஆர்டர் அப்படி உள்ளது. ரசல் மாதிரியான வீரர் இருக்கும்போது பேட்டிங் ஆர்டரில் கீழ் இறங்குவதில் பிரச்னையில்லை.
டெல்லி அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது: மோர்கன் - மோர்கன்
இளம் வீரர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் டெல்லி அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என கொல்கத்தா அணியின் மோர்கன் தெரிவித்துள்ளார்.
மோர்கன்
இந்தப் போட்டியில் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. நிதீஷ் ராணா, திரிபாதி ஆகியோர் சிறப்பாக ஆடினர். நரைன் அணிக்காக பல நிலைகளில் பங்காற்றியுள்ளார். இன்னும் கொஞ்சம் வாய்ப்பளிப்பதில் தவறில்லை.
இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோப்பையை வெல்வதற்கும் வாய்ப்புள்ளது'' என்றார்.