ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீன் சர்ச்சைக்குரிய முறையில் பந்துவீசியதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இவரின் பந்துவீச்சு சர்ச்சைக்குரிய முறையில் இருந்தமையால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவருக்கு மூன்று மாதங்கள் பந்துவீச தடைவிதித்து உத்திரவிட்டுள்ளது. ஆனால் அவருக்கு பந்துவீச மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய போட்டிகளில் பங்கேற்று பேட்டிங்கில் ஈடுபடலாம் எனவும் தெரிவித்துள்ளது.