2019 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அதேவேளையில் மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் சற்று முன்னதாகவே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது.
இதனால், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும், அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கான ஒட்டுமொத்த அட்டவணையையும் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் படியாக அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அணி நிர்வாகிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
எட்டு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் மொத்தமாக 14 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அதில் 7 ஆட்டங்கள் சொந்த மைதானத்திலும், 7 ஆட்டங்கள் வெளியூர் மைதானங்களிலும் நடைபெறும். நேற்றைய அறிவிப்பால் அனைத்து அணிகளும் தங்களது ஊரில் விளையாடும் போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியானது.
இந்த அட்டவணை குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியதாவது,