இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரானது 12 சீசன்களைக் கடந்து தற்போது 13ஆவது சீசனுக்குத் தயாராகிவருகிறது. அதிலும் குறிப்பாக ஐபிஎல்-இல் பங்கேற்கும் அணிகள் தங்களது பயிற்சியாளர்கள் முதற்கொண்டு பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது.
அந்த வரிசையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது அந்த அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய அணியின் மூன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸியையும், பந்துவீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸையும் நியமித்துள்ளது.