தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரோஹித்துக்கும்-பொல்லார்ட்டுக்கும் மோதலா? - ரசிகர்கள் குழப்பம் - ரோஹித் சர்மாவை ட்விட்டரில் பின் தொடர்வதிலிருந்து நிறுத்தியுள்ளார்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரன் பொல்லார்ட் தனது நீண்ட கால நண்பரான ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

Kieron Pollard unfollows Rohit Sharma on Twitter

By

Published : Nov 21, 2019, 3:08 PM IST

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இன்று அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் கிரான் பொல்லார்ட் தலைமையில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று பொல்லார்ட் ஐபிஎல்லின் சக அணி வீரரான இந்தியாவின் ரோஹித் சர்மாவை ட்விட்டரில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பொல்லார்ட் - ரோஹித் சர்மா

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் நெறுங்கிய நண்பர்களாகவும் இருந்துவந்த நிலையில், தற்போது பொல்லார்டின் இந்த செயலானது இந்திய ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: NZ v ENG 2019: முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details