தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'நான் இந்தியாவுக்கு கடமைப்பட்டுள்ளேன்' - கெவின் பீட்டர்சன்

டெல்லி: பொருளாதார ரீதியாகவும், உணர்வு நீதியாகவும் இந்தியாவுக்கு கடமைப்பட்டுள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

kevin-pietersen-i-love-ipl-owe-a-lot-to-india
kevin-pietersen-i-love-ipl-owe-a-lot-to-india

By

Published : Sep 18, 2020, 3:31 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே இந்தத் தொடர் நடக்கவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள், வீரர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறுகையில், '' இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிச்சயம் பெரும் மாற்றம் தான். ரசிகர்கள் இல்லாத மைதானங்கள், கொண்டாட்டங்கள் என எதுவும் இருக்க போவதில்லை. அனைவரும் தனிமையில் தான் இருக்கப் போகிறார்கள். அந்த நேரத்தில் எந்த அணி சிறப்பாக சமாளிக்கிறதோ, அந்த அணி வெற்றிபெறும்.

இப்போது யார் வெல்வார்கள் என கூற முடியாது. ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற வேண்டும் என மனதளவில் ஆசை உள்ளது. ஆனால் இந்தத் தொடர் ஆடும் வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் புதியதாக இருக்கப் போகிறது. அதனால் முதல் இரண்டு வாரத்தில் அனைத்து அணிகளின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே, யார் வெல்வார்கள் என்பதை கணிக்க முடியும்.

இளம் வீரர்களையும், எனர்ஜிட்டிக் வீரர்களையும், ரிஸ்க் எடுக்கும் வீரர்களையும் அதிகமாக பிடிக்கும். அதனால் தான் டெல்லி அணியைப் பிடித்திருக்கிறது.

எப்போதும் ஐபிஎல் மீதான பிரியம் என்னுள் குறையவே குறையாது. 2002ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியா வந்தேன். அந்த நேரத்திலேயே எனக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள். அதன்மூலம் இந்திய கலாசாரத்தை அறிந்துகொள்ள முடிந்தது. நிச்சயம் பொருளாதார ரீதியிலும், உணர்வு ரீதியிலும் இந்தியாவுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்'' என்றார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வர்ணனையாளர் குழுவில் கெவின் பீட்டர்சன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பலமும் பலவீனமும்... மும்பை இந்தியன்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details