தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விராட் கோலி, கே.எல். ராகுலை வம்புக்கு இழுத்த இளம் வீரர்! - அப்பர்கட்

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தனது ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலி, கே.எல். ராகுலை வம்புக்கு இழுத்துள்ளார்.

Keep it up youngsters: Chahal trolls Kohli, Rahul
Keep it up youngsters: Chahal trolls Kohli, Rahul

By

Published : Jan 29, 2020, 9:42 AM IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்குகிடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹமில்டனில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியின் கேப்டன் கோலி, தொடக்கவீரர் கே.எல்.ராகுலை ட்ரோல் செய்யும் விதத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அப்பர்கட்’ எனப்படும் ஷாட்டை சாஹால், விராட் கோலி, ராகுல் மூவரும் விளையாடுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு அதில், ’இருவரும் என்னைப் போல இந்த ஷாட்டை அடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் பயிற்சி தேவை. அதனால் முயற்சி செய்யுங்கள் இளம் வீரர்களே’ என்று பதிவிட்டுள்ளார்.

சஹாலின் ட்விட்டர் பதிவு

தற்போது சஹாலின் ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட்டிற்கு அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details