டி10லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி புல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கர்நாடக அணியில் உப்புல் தரங்கா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் கர்நாடக அணி 10 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உப்புல் தரங்கா 57 ரன்களை குவித்தார்.
அதன்பின் 111 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் பெரேரா, பால் ஸ்டர்லிங்-கின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய மேத்யூஸ் மற்றும் மோர்கன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருந்த போதும் டெல்லி அணியால் 10 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 31 ரன்களை எடுத்தார்.
இதன் மூலம் கர்நாடக டஸ்கர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி புல்ஸ் அணியை வீழ்த்தி டி10 லீக்கில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: பயிற்சியாளரைப் பார்த்து வாயை மூடு என்று சொன்ன மெஸ்ஸி..!