1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை அமைக்கை வித்திட்டவர் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.
கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களையும், 687 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் கபில்தேவ் இன்று தனது 62ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமிட்ட ஜாம்பவானுக்கு சக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துவருகின்றனர். அவற்றுள் சில...
‘லிட்டில் மாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் கபில்தேவ் அண்ணா. மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு ஆண்டாக அமைய என்னுடைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.