இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களுக்கும் முதியோர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் சிலர் தயக்கம் காட்டிவருகின்றனர். இதனால் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அந்த வரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்தவருமான கபில் தேவ் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.