நடந்து வரும் டிஎன்பில் டி20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில் காரைக்குடி காளை அணியும் காஞ்சிபுரம் வீரன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற காரைக்குடி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டிஎன்பிஎல்: காஞ்சி வீரன்ஸ் சஞ்சய் யாதவ் அதிரடி! - tnpl
திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ் அணி.
அதைத் தொடர்ந்து விளையாடிய காஞ்சி வீரன்ஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் சஞ்சய் யாதவ் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணி பந்து வீச்சை சிதறடித்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் 60 பந்துகளில் 95 ரன்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் காஞ்சி வீரன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது. காரைக்குடி அணி சார்பில் சுனில் சாம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கரைக்குடி காளை அணி விளையாடி வருகின்றது.