இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றது.
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் சவுதி...! - இலங்கை அணி
இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், வேகப்பந்துவீச்சாளர் ட்ரண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், அனுபவ வீரரான டிம் சவுதி நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்து டி20 அணி விவரம்;
டிம் சவுதி (கே), டாட் ஆஸ்லே, டாம் புரூஸ், காலின்-டி-கிராண்ட்ஹோம், ஃபெர்குசன், மார்ட்டின் கப்தில், ஸ்காட் குகலீன், டேரில் மிட்செல், காலின் மன்றோ, சேத் ரான்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சீஃபர்ட், இஷ் சோதி, ரோஸ் டெய்லர்