நியூசிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமானவர் கேன் வில்லியம்சன். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றது. இருப்பினும் பவுண்டரி கணக்கு அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கேன் வில்லியம்சன் தனக்கும் தனது மனைவி சாரா ரஹீமுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைக்குத் தந்தையான வில்லியம்சனுக்கு கிர்க்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.