19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சதம் விளாசிய கல்ராவுக்கு, ஜூனியர் கிரிக்கெட்டில் வயது குறித்த தவறான தகவல்கள் அளித்த காரணங்களால் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் நடுநிலையாளரான (ஆம்புட்ஸ்மேன்) பாதர் துரெஸ் வழங்கியபின், அவர் ஓய்வில் சென்றார்.
இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பேசுகையில், ”கல்ரா ரஞ்சி டிராபி தொடரில் ஷிகர் தவானுக்கு மாற்று வீரராக களமிறங்கயிருந்தார். ஆனால் இனி ஆட முடியாது. இதேபோன்ற தண்டனைகள் ராணா, மாவி ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும். ஒரு வீரருக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டு, மற்றொரு வீரருக்கு ஆவணங்கள் சரிபார்ப்போம் என்றும் இன்னொரு வீரருக்கு பிசிசிஐ விசாரணை செய்யும் எனக் கூறுவது சரியல்ல.