ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றார்கள்.
இப்போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு மோசமான ஃபீல்டிங்கும், பந்துவீச்சுமே காரணம் என ரசிகர்கள் கருத்து கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணி மிகமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்த போட்டியில்தான். கையில் விழுந்த கேட்ச்சுகளை தவறவிட்டனர். அதேபோல், இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் இந்தியா தோனியின் அருமையை உணருகிறது. ஆஸ்திரேலியாவின் ஆஸ்டன் டார்னர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்' என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தப் போட்டியின்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் வாய்ப்பைத் தவறவிட்டபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி... தோனி... என பாகுபலி ஸ்டைலில் ஆர்ப்பரிக்கத் தொடங்கியதால் ரசிகர்கள் மத்தியில் அந்த வீடியோ வைரலாகிவருகிறது.