இந்திய அணியின் ஃபீல்டிங் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது முகமது கைஃப் தான். தனது அபாரமான ஃபீல்டிங்கால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். மேலும் 2000ஆவது ஆண்டு இவரது தலைமையிலான அண்டர்19 இந்திய அணி, முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் ஆஸ்திரேலிய அணியுடனான நெட்வெஸ்ட்(Netwest) தொடரின் போது 326 என்ற இலக்கை யுவராஜ் சிங்குடன் இணைந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தவர்.
இதுவரை இந்திய அணிக்காக 125 ஒருநாள், 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள கைஃப்ம், 3337 ரன்களை எடுத்துள்ளார். அதன்பின் 2018ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.