தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது; ரஸ்சல், ஹோல்டர் தேர்வு! - சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது

ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தினால் அந்நாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதை பெற்றனர் ஹொல்டர், ரஸ்சல், சாய் ஹோப், பவுல்.

andre russel

By

Published : Aug 20, 2019, 12:07 PM IST

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தியனால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கன விருது வழங்கும் விழா நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த விழாவில் 2018-19ஆம் ஆண்டிற்கான சிறந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளின் விவரம்:

  • இதில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஓராண்டில் 336 ரன்களும், 33 விக்கெட்டுகளையும் எடுத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
  • மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை விக்கெட் கீப்பர் சாய் ஹோப் பெற்றார். இவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 875 ரன்களைக் குவித்து இந்த விருதுக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.
  • சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆல்ரவுண்டர் கீமா பவுல் பெற்றார். இவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் 124 ரன்களும், 17 விக்கெட்டுகளும் எடுத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
  • கரீபியன் பிரீமியர் லீக்கில் சிறந்து விளங்கியதற்காக ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்சலுக்கு ஆண்டின் சிறந்த கரீபியன் லீக் வீரர் என்ற விருதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வழங்கியது.

ABOUT THE AUTHOR

...view details