கடந்த 2004 ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருபவர் டுமினி. தென்னாப்பிரிக்க அணிக்காக இதுவரை 193 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 ஆயிரத்து 47 ரன்களை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த டுமினி, வரும் உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரமாக கருதுகிறேன். சொந்த நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடியது பெருமையாக உள்ளது.
இதற்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் விளையாடிய எனது சகவீரர்கள், பயிற்சியாளர்கள், என்னை ஊக்குவித்த நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றலும், டி20 தொடர்களில் தொடர்ந்து பங்கேற்பேன். குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிடவே தற்போது விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை இலங்கைக்கு எதிராகநடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டியில் டுமினி தாஹிர் இருவரும் சொந்த மண்ணில் தங்களது இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் வரும் உலகக்கோப்பையுடன் ஓய்வினை அறிவித்தது குறிப்ப்டத்தக்கது.