ரசிகர்களால் சின்ன தல என்றழைக்கப்படும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், நான்கு முதல் ஆறு வாரங்களில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சின்ன தலைக்கு ஜான்டி ரோட்ஸ் சொன்ன அறிவுரை! - ரெய்னா
பலருக்கு உத்வேகமாக இருந்த நீங்கள் தற்போது உடலை கவனித்துக்கொள்ளுங்கள் என இந்திய வீரர் ரெய்னாவுக்கு ஜான்டி ரோட்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அந்த வரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸும் இணைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த இரண்டு ஆண்டுகளில் உங்களது ஆட்டத்தின்மூலம் பலருக்கு உத்வேகத்தை தந்துள்ளீர்கள். நாளைக்கே நீங்கள் மீண்டும் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள், ஆனால் தற்போது உங்கள் உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ரெய்னாவின் சக சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங், மீண்டு வா சாம்பியன் ரெய்னா என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய அணியில் ஜான்டி ரோட்ஸுக்கு பிடித்த ஃபீல்டர் ரெய்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது.