தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யார்க்ஷயரின் முதல் பெண் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற அதிரடி வீரரின் தாய்!

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோவின் தாய் ஜேனட் பேர்ஸ்டோ (Janet Bairstow) பிரபல கவுண்டி கிளப் அணியான யார்க்ஷயர் அணியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Jonny Bairstow's mother elected as Yorkshire's first female vice-president
Jonny Bairstow's mother elected as Yorkshire's first female vice-president

By

Published : Mar 22, 2020, 1:15 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மிக முக்கிய உள்ளூர் தொடராகக் கருதப்படுவது கவுண்டி கிரிக்கெட் தொடர். இத்தொடரின் வருடாந்திர கூட்டம் நேற்று லண்டனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுண்டி கிரிக்கெட் தொடரின் அணியான யார்க்ஷயர் அணிக்கான துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜானி பேர்ஸ்டோவின் தாய் ஜேனட் பேர்ஸ்டோ, யார்க்ஷயர் அணியின் துணைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். மேலும் யார்க்ஷயர் அணிக்காகத் தேர்வுசெய்யப்பட்ட முதல் பெண் துணைத் தலைவர் என்ற சிறப்பையும் ஜேனட் பெற்றுள்ளார்.

ஜானி பேர்ஸ்டோ அவரது தாய் ஜேனட் பேர்ஸ்டோ

இது குறித்து யார்க்ஷயர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜானி பேர்ஸ்டோவின் தாயர் ஜேனட் பேர்ஸ்டோ, தனது இளம் வயது முதல் யார்க்ஷயர் கிரிக்கெட்டிற்காகப் பணியாற்றிவருகிறார்.

மேலும் இவர் 13 ஆண்டுகளாக யர்க்ஷயர் கிளப்பின் நிர்வாகியாகவும் பணியாற்றிவந்துள்ளார். இவர் தற்போது யார்க்ஷயர் அணியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் தலைவர் கரோனாவால் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details