ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழும் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, தான் டெஸ்ட் போட்டிகளிலும் சிறந்த தொடக்க வீரர் என்பதை தென் ஆப்பிரிக்கா தொடரில் நிரூபித்துக்காட்டியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியின் மூலம், ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்த அவர், இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். பலரும் இவரது ஆட்டத்தைப் பாராட்டி வந்தனர்.