தமிழ்நாடு

tamil nadu

விராட் கோலிய பத்தி பேசுனா... இதுதான் கதி! வாங்கி கட்டிய நியூசி. வீரர்

By

Published : Aug 4, 2019, 11:41 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து வீரருடன் ஒப்பிட்டு பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமை ட்விட்டரில் ரசிகர்கள் கலாய்த்துதள்ளினர்.

Jimmy neesham

உலகக்கோப்பை தொடருக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்றுவரும் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸ், 133 ரன்கள் அடித்து தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தார்.

இந்நிலையில், ரோரி பெர்ன்ஸ் சதம் குறித்து நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் பதிவிட்ட கருத்து, ரசிகர்கள் அவர் மீது வார்த்தைப் போர் தொடுக்க காரணமாக அமைந்துவிட்டது. ஜிம்மி நீஷம் தனது ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலி மொத்தமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் குவித்த ரன்களைக் காட்டிலும், ரோரி பர்ன்ஸ் தனது முதல் ஆஷஸ் போட்டியிலேயே குவித்தார் என்று பதிவிட்டிருந்தார்.

ஜிம்மி நீஷம்மின் ட்வீட்

ஜிம்மி நீஷம்மின் இந்தக் கருத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கலாய்த்து பல்வேறு பதிவுகளையும் பதிவிட்டனர். ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே மட்டுமே நடைபெறும் பழமைவாய்ந்த தொடராகும்.

ரசிகரின் ட்வீட்
ரசிகரின் ட்வீட்

அதில் ஒரு ரசிகர் கிரிக்கெட் உலகில் ஜிம்மி என்றால் யார்... நமக்கு தெரிந்ததெல்லாம் ஜிம்மி அமர்நாத், ஜிம்மி ஆண்டர்சன் மட்டுமே, ஜிம்மி நீஷம் பற்றி கேள்விப்பட்டதில்லை என்று பதிவிட்டிருந்தார்.

ரசிகரின் ட்வீட்

இதுபோன்று பல ரசிகர்களும் ஜிம்மி நீஷமை கிண்டல் செய்து பல கருத்துகளை பதிவிட்டனர். ரசிகர்களின் கோபத்தை உணர்ந்த ஜிம்மி நீஷம்,

ஜிம்மி நீஷம்மின் இரண்டாவது ட்வீட் பதிவு

நான் செய்த ஜோக் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். விராட் கோலி இந்தியன் என்பதும் அவர் ஆஷஸ் தொடரில் பங்கேற்க முடியாது என்பதும் தனக்குத் தெரியும்.

அவரை இங்கிலாந்து வீரரின் ஆஷஸின் ரன்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரி என்று நினைக்கவில்லை. மேலும் எனது பதிவுக்கு இத்தனை மறு பதிவுகள் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார். எனினும் அதன்பின்பும் ஜிம்மி நீஷமை ரசிகர்கள் விடாமல் கலாய்த்தனர்.

ரசிகரின் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details